Content Status

Type

Linked Node

H5Content
Content

நிக்ஷய் இணைய வழி மென்பொருளை பயன்படுத்தி கைபேசி செயலியை காசநோய் திட்டத்தில் பயன்படுத்துதல்

Figure: Nikshay Home Page

நி-க்ஷ்ய் இணைய வழி மென்பொருளை பயன்படுத்தி கைபேசி செயலியை காசநோய் திட்டத்தில் பயன்படுத்துதல்

நி-க்ஷ்ய் இணையதளத்தில் உள் நுழைந்த பிறகு தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் மூலம் சுகாதார பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உள் நுழைவுச் சான்றுகளை (Login Credential) பயன்படுத்தி, சுகாதார தன்னார்வலர்கள் பின்வரும் செயல்களை நி-க்ஷ்ய்யில் செய்ய முடியும்.

•  நி-க்ஷ்ய் இணையதளத்தில் புதிய நோயாளியை பதிவு செய்ய முடியும்.

 (NEW ENROLLMENT)


•  நி-க்ஷ்ய் அடையாள எண் நோயாளியின் பெயர், பழைய அடையாள எண் ஏதேனும் இருப்பின் அவற்றை பயன்படுத்தி பழைய காச நோயாளிகளை பற்றிய விவரங்களை சேகரிக்க முடியும். (SEARCH PATIENT)


  அறிகுறி உள்ளவர்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனை விவரங்களை பதிவு செய்ய முடியும். (ADD PATIENT TEST) 


•  பரிசோதனை முடிவுகள் இதுவரை அறிவிக்கப்படாமல் நிலுவையில் உள்ள நோயாளிகளின் பட்டியலைப் பார்வையிட முடியும். (DIAGNOSIS PENDING)


• கண்டறியப்பட்ட, ஆனால் சிகிச்சை தொடங்குவதற்கு நிலுவையில் உள்ளநோயாளிகளின் பட்டியலைப் பார்க்க முடியும். (Not on Treatment)


•  சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் விவரங்களைப் பெற முடியும்.    (On Treatment)


•  இதுவரை சிகிச்சையை முழுமையாக முடித்த காசநோயாளிகளின் விவரங்களைப் பெற முடியும். (Outcome Assigned)


•  நி-க்ஷ்ய் இணையதளத்தில் காசநோய் குறித்து பணியாளர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி கையேடுகளைப் பெறமுடியும். (Training Material)


•  கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்ட சிகிச்சையில் உள்ள அனைத்து     காச நோயாளிகளின் சிகிச்சை விவரங்களின் சுருக்க பதிவினைப்  பெற முடியும். (Patient Summary) 


• காசநோயாளிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய நாட்கள் பற்றிய விவரங்களை இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ள முடியும், நோயாளிகளின் வங்கி விவரங்கள் மற்றும் சிகிச்சை காலத்தின் போது வழங்கப்படும் நிதி உதவி நோயாளிகளுக்கு சென்றடைந்துள்ளதா என்று இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும். காசநோயாளிகளின் வங்கி விவரங்கள் மற்றும் சிகிச்சை காலத்தின் போது வழங்கப்படும் நிதி உதவி நோயாளிகளுக்கு சென்றடைந்து உள்ளதா என்று இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும். (Task List)

 

 

 

Page Tags

Content Creator

Reviewer

Comments