Content Status
Type
Linked Node
TB Case classification in NTEP
Learning ObjectivesTB cases are classified into different types based on a set of factors such as:
- Site of disease
- Previous history of TB treatment
- Resistance to anti-TB drugs
- Basis of diagnosis
(NTEP) தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் காசநோயின் வகைப்பாடு:
பொதுவாக காசநோய்க்காக ஏற்கனவே மருந்து எடுத்துக் கொள்ளப்பட்ட சிகிச்சையின் அடிப்படையிலும் புதிதாக கண்டறிதல் அடிப்படையிலும் புதிய காசநோய் என்றும் முன்பு சிகிச்சை அளிக்கப்பட்ட காசநோய் என்றும் வகைப்படுத்தப்படுகின்றன
புதிய நோய் - காசநோய்க்கு சிகிச்சை பெறாத அல்லது ஒரு மாதத்திற்கும் குறைவான காசநோய்கான மருந்துகளை எடுத்துக் கொண்ட காசநோயாளிகள் புதிய நோயாளியாகக் கருதப்படுகின்றனர்.
முன்னர் சிகிச்சை பெற்ற நோயாளிகள் - கடந்த காலத்தில் 1 மாதம் அல்லது அதற்கு மேற்பட்ட காசநோய்கான எதிர்ப்பு மருந்துகளைப் பெற்றுள்ளனர். அவற்றை மேலும் வகைப்படுத்தலாம்:
மீண்டும் மீண்டும் வரும் காசநோய் (Recurrent) -
காசநோயாளியாய் இருந்து முறையான சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து சிறிது கால இடைவெளிக்கு பின்னர் மீண்டும் நுன்னுயிரியல் ரீதியாக உறுதி செய்யப்பட்ட காசநோயாளிகள் மீண்டும் மீண்டும் வரும் காசநோயாளிகள் என்று வகைப்படுத்தப்படுகின்றனர்.
சிகிச்சை பலனளிக்காமல் தோல்வியடைதல் (Failure)-
காசநோய்க்கு சிகிச்சை பெறுபவர்கள் அவர்களின் மிக சமீபத்திய சிகிச்சையின் பரிசோதனை முடிவில் மீண்டும் காசநோய்க் கிருமி இருப்பதாக அறிவிக்கப்பட்டால் அவர்கள் குணமடையாமல் இருப்பவர்கள் அல்லது சிகிச்சை பலனின்றி சிகிச்சை தோல்வி அடைந்தவர்கள் என்று வகைப்படுத்தப்படுகின்றனர்.
முழு சிகிச்சையும் எடுக்காமல் மருந்தினை இடையில் நிறுத்தியவர்கள்-
காசநோயாளிகள் முன்பு 1 மாதம் அல்லது அதற்கும் மேலாக காசநோய்க்கு சிகிச்சை பெற்று, அவர்களது சமீபத்திய சிகிச்சையினை இடையில் நிறுத்தி (treatment after loss to follow up), பின்னர் நுண்ணுயிரியல் ரீதியாக காசநோய் உள்ளது உறுதிப்படுத்தப்பட்ட காசநோய் கண்டறியப்படுவது. உறுதிப்படுத்தப்பட்டவர்கள் சிகிச்சையினை இடையில் நிறுத்தியவர்கள் என்று வகைப்படுத்தப்படுகின்றனர்.
முன்னர் சிகிச்சையளிக்கப்பட்ட மற்ற நோயாளிகள், முன்பு காசநோய்க்கு சிகிச்சை பெற்றவர்கள், ஆகியோர்க்கு அவர்களின் மிகச் சமீபத்திய சிகிச்சைக்குப் பிறகான முடிவுகள் தெரியவில்லை அல்லது ஆவணப்படுத்தப்படவில்லை என்றால் அவர்களது சிகிச்சை நிலைமை அறிவிக்கப்படவில்லை என்று வகைப்படுத்தப்படுகின்றனர்.
காசநோயாளிகளை நீண்டகாலத்திற்கு கண்காணித்து பின் பரிசோதனை செய்வது (Post follow up)-
காசநோய் சிகிச்சையை முடித்த பிறகு, அனைத்து நோயாளிகளையும் தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு கீழ்கண்ட மாதங்களில் அவர்களை தொடர்புகொண்டு, கண்காணித்து பரிசோதிக்க வேண்டும்
6 மாதங்கள்,
12 மாதங்கள்,
18 மாதங்கள்,
24 மாதங்கள்.
இவ்வாறு காசநோயாளிகளை கண்காணிக்கும்போது, ஏதேனும் மருத்துவ அறிகுறிகள் இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும். பரிசோதனையில் ஏதேனும் அறிகுறி கண்டறியப்பட்டால், அவர்களது சளியை நுண்ணோக்கி மற்றும்/அல்லது கல்ச்சர் மூலம் பரிசோதனை செய்ய வேண்டும். காசநோய் மீண்டும் வருவதை ஆரம்பத்திலேயே கண்டறிவதில் இது முக்கியமான படிநிலையாகும்.
காசநோய் சிகிச்சையை முடித்த பிறகு, நோயாளிக்கு எந்த மருத்துவ அறிகுறிகளும் உருவாகவில்லை என்றாலோ அவர்களை கண்காணிக்கும் போது பரிசோதனை முடிவுகள் எதிர்மறையாக இருந்தாலோ, அந்நோயாளி "காசநோயிலிருந்து முற்றிலும் குணமடைந்தவர்” என்று கருதப்படுகிறார்.
Content Creator
Reviewer
Target Audience
- Log in to post comments