Content Status
Type
Linked Node
Role of Health Volunteers
Learning ObjectivesDiscuss the role of health volunteers in the TB program. From generating community awareness and case finding to providing treatment support and completing treatment.
சுகாதார தன்னார்வலர்கள்
• அவர்கள் தாங்கள் பணிபுரியும் சமூகங்களின் அங்கத்தினர் ஆவார்கள்.
• சுகாதார அமைப்பால் இவர்கள் ஆதரிக்கப்படுவார்கள், ஆனால் அவர்கள் சுகாதார அமைப்பின் ஒரு பகுதியாக இருக்க வேண்டிய அவசியமில்லை,
• மேலும் தொழில்முறை சுகாதார பணியாளர்களைவிட, தன்னார்வாலர்கள் குறுகிய கால பயிற்சி பெற்றிருந்தாலே போதுமானது ஆகும்.
படம்: சுகாதார தன்னார்வலர்கள்
-
சமூகத்தில் இரண்டு வாரங்களுக்கு மேல் இருமல் இருப்பவர்களை அனுமானிக்கக் கூடிய காசநோயாளியாக அடையாளம் காண தன்னார்வலர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
-
அவர்களை சளி பரிசோதனைக்காக நுண்ணோக்கி இருக்கும் இடங்களுக்கு மற்றும் சி பி நாட் பரிசோதனை செய்ய அனுப்பவும், அவர்களை நி-க்ஷ்யில் பதிவு செய்யவும் தன்னார்வலர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
-
சுகாதார தன்னார்வலர்கள் காசநோயாளிக்கு சிகிச்சை அளிப்பதை உறுதி செய்து அவர்கள் சிகிச்சை காலம் முழுவதும் மருந்தை எடுப்பதற்கு உதவியாகவும், சிகிச்சையை முறையாக எடுக்கவில்லை என்றால் அவர்களை மீண்டும் சிகிச்சைக்குட்படுத்தவும் உதவியாக இருக்க வேண்டும்.
-
தன்னார்வலர்கள் சிகிச்சையின் போது நோயாளிக்கு ஆதரவாகவும் நோயாளி தனது மருந்தை எடுப்பதை இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து எடுத்துக் கொள்வதை உ றுதி செய்பவராகவும் இருக்க வேண்டும்.
-
கூடுதல் ஊட்டச்சத்து உணவுகளை உட்கொள்ள நோயாளிக்கு பரிந்துரைக்கவும், அது குறித்து ஆலோசனை வழங்கவும், நோயை தடுப்பதற்கான வழிகள் மற்றும் ஆரோக்கியமான நடத்தைகளை பின்பற்ற நோயாளிகளுக்கு எடுத்துரைக்கவும் தன்னார்வலர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
Resources:
Kindly provide your valuable feedback on the page to the link provided HERE
Content Creator
Reviewer
Target Audience
- Log in to post comments