Content Status

Type

Linked Node

H5Content
Content

ஊட்டச்சத்து நிதியுதவி திட்டம் (“நி-க்ஷ்ய் போஷன் யோஜனா”) திட்டத்தின் மூலம் பயன்பெறும் காசநோயாளிகளுக்கான தகுதிகள்:

  • ஏப்ரல் 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு சிகிச்சை எடுத்து கொண்ட அனைத்து காசநோயாளிகள் அனைவரும் இத்திட்டத்தின் மூலம் பண பலன்களைப் பெறலாம்.
  • தற்போது சிகிச்சையில் உள்ள அனைத்து காசநோயாளிகளும் ஊக்கத்தொகை பெற தகுதி உடையவர்கள் ஆவர்.
  • இவ்வூக்கத்தொகையைப் பெற, காசநோயாளிகள் அனைவரும் தங்களது வங்கி விவரங்களை காசநோய் சுகாதார பணியாளரிடம் வழங்க வேண்டும்.
  • இதற்காக சுகாதாரப் பணியாளர்கள் நோயாளிகளின் வங்கி விவரங்களை நி-க்ஷ்ய் இணைய தளத்தில் பதிவிடவேண்டும்.
  • நோயாளி ஏற்கனவே வைத்துள்ள சேமிப்பு வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டு பண பலங்கள் வழங்கப்படும்.
  • இதுவரை வங்கிக் கணக்கு இல்லாத நோயாளிகளுக்கு வங்கி கணக்கு தொடங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • புதிய வங்கிக் கணக்கு தொடங்க வாய்ப்பு இல்லாத போது, நோயாளியின் குடும்ப உறுப்பினர்களான, பெற்றோர், கணவன், மனைவி ஆகியோரது வங்கிக் கணக்கை ஊட்டச்சத்து உதவித் தொகையைப் பெற “நி-க்ஷ்ய்” இணையத்தில் இணைக்கலாம்.
  • உறவினர்களின் வங்கிக்கணக்கை பயன்படுத்தும் போது, நோயாளியின் எழுத்துப்பூர்வமான ஒப்புதலைப் பெறவேண்டும்.
  • ஒரு வங்கிக் கணக்கு ஒரு காசநோயாளிக்கு பயன்படுத்தப்பட்டிருந்தால், அதை மற்றொரு காசநோயாளிக்கு அதே வங்கிக் கணக்கைப் பயன்படுத்த முடியாது. அச்சமயத்தில் அப்புதிய காசநோயாளிக்கு புதிய வங்கிக் கணக்கைத் தொடங்க முழு முயற்சி காசநோய் சுகாதாரப் பணியாளர்களால் எடுக்கப்பட வேண்டும்.

 

Content Creator

Reviewer