Content Status

Type

Linked Node

H5Content
Content

காசநோய் அலகு (Tuberculosis Unit)

  • காசநோய் அலகு என்பது  தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் வட்டார அளவில் செயல்படும் காசநோய் கண்டறியும் மற்றும் சிகிச்சை மையங்களைக் குறிக்கின்றது.
  • பொதுவாக, இக்காசநோய் அலகுகள் தேசிய சுகாதார இயக்கத்தின் நிதி உதவியுடன் செயல்படுகின்றன.
  •  இக்காசநோய் அலகுகள் தேசிய சுகாதார இயக்கத்தின் வட்டார திட்ட மேலாண்மையுடன் (BPMU) இணைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.
  • 1.5 லட்சம் முதல் 2.5 லட்சம் வரையிலான நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள் தொகைக்கு ஒரு காசநோய் அலகு உருவாக்கப்பட்டுள்ளது. மலை கிராமங்கள், எளிதில் சென்றடைய முடியாத கிராமங்கள் போன்ற பகுதியில் வசிக்கும் மக்களுக்கென ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு ஒரு காசநோய் அலகு உருவாக்கப்பட்டுள்ளது.
  •  ஒவ்வொரு காசநோய் அலகும் மருத்துவ அலுவலர், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்(STS), ஆகியோரை உள்ளடக்கி செயல்பட கூடிய ஒன்றாகும். நான்கு முதல் 5 காசநோய் அலகுகளில் காசநோய் ஆய்வுக்கூட செயல்பாடுகளை மேற்பார்வையிட முதுநிலை ஆய்வக கூட மேற்பார்வையாளர் (STLS) பணியாற்றுகிறார்.
  • ஒவ்வொரு காசநோய் அலகிலும் காசநோயை கண்டறிதல், நோயாளிகளுக்கான சிகிச்சை அளித்தல், காசநோயாளிகளை தொடர்ந்து கண்காணித்தல் காசநோய் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்துதல் போன்ற சேவைகள் காசநோய் அலகுக்கு  உட்பட்ட பகுதிகளில் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன.
  • சுகாதார நிலையங்களில் காசநோயை கண்டறிவதும், கண்டறிந்த பிறகு அதற்குரிய சிகிச்சையும் இலவசமாக வழங்கப்படுகின்றன இந்நிலையங்களில் மருத்துவர் பணியில் இருப்பார்.
  •  இந்நிலையங்கள் பொதுவாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் என்று அழைக்கப்படும். இந்நிலையங்கள் நோயாளிகளின் வீட்டிற்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருக்கும்.
  •  இவை நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை இலவசமாக வழங்கி வருகின்றன.
  • ஒவ்வொரு காசநோய் அலகிலும் ஒன்று முதல் மூன்று வரையிலான தேர்ந்தெடுக்கப்பட்ட நுண்ணோக்கி மையங்கள் செயல்படுகின்றன.
  •  இம்மையங்கள் நோயாளிகளின் சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு காசநோய் உள்ளதா அல்லது இல்லையா என்பதை உறுதிப்படுத்தப்படுகின்றன.
  •  இம்மையங்களில் TRUNAAT நுண்ணோக்கி போன்ற கருவிகள் சளி பரிசோதனை செய்ய வைக்கப்பட்டிருக்கும்.
  •  இங்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, உயர் பரிசோதனை கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
  •   மாவட்ட காசநோய் மையமானது காசநோய் அலகுகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது . இச்சேவைகளைத் தவிர இத்திட்டத்தின் மூலம் கட்டணமில்லா இலவச தொலைபேசி சேவையையும் இத்திட்டம் மக்களுக்கு வழங்ப்படுகின்றது.

 

Image
Tuberculosis unit

Page Tags

Content Creator

Reviewer