Content Status

Type

Linked Node

  • Prevention of TB

    Learning Objectives

    The learner will be able to outline TB prevention measures  including infection control measures, TB Preventive Therapy, and vaccination.

H5Content
Content

காசநோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள்

காசநோய் ஒரு காற்றில் பரவும் தொற்று நோய் என்பதால் காசநோயால்  பாதிக்கப்பட்ட ஒருவர் இருமல் அல்லது தும்மும் போது காசநோய் பாக்டீரியா காற்று மூலம் பரவுகிறது எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  மேற்கொள்வதன் மூலம் நோய் தொற்றின் அபாயத்தைக் குறைக்கலாம்.

  • நல்ல காற்றோட்டம் உள்ள இடத்தில் வசிக்க வேண்டும்

சரியான காற்றோட்டம் இல்லாவிட்டால் காசநோய் கிருமி காற்றில் பல மணி நேரம் அதே இடத்தில் கலந்து இருக்கும். எனவே, நல்ல காற்றோட்டம் உள்ள இடங்களில் மக்கள் வசிக்க வேண்டும்

 

  • சூரிய ஒளி

சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதா கதிர்கள் காசநோய் கிருமியை அழிக்கிறது. எனவே வெயில் படக்கூடிய இடங்களில் மக்கள் காலை அல்லது மாலை வேளைகளில் உலவ வேண்டும்

 

  • சுகாதாரம்

இருமல் மற்றும் தும்மல் வரும்போது வாயை மூடுவதன் மூலம் காற்றில் காச நோய்க் கிருமி பரவுவது தடுக்கப்படுகிறது. எனவே மக்கள் சாதாரணமாக தும்மும் போது இருமும் போதும் வாயில் துணி வைத்து கொள்ள வேண்டும்.

 

குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி

BCG தடுப்பூசி போடுவதின் மூலம் மில்லரி மற்றும் மூளையில் வரும் காசநோய் தடுக்கப்படுகிறது.  எனவே பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் BCG  தடுப்பூசி போடப்பட்டுள்ளதா என்று உறுதிப்படுத்த வேண்டும்.

 

Content Creator

Reviewer

Comments