Content Status

Type

Linked Node

H5Content
Content

99 DOTS:

99 DOTS என்பது டிஜிட்டல் தொழில் நுட்பத்தை பின்பற்றி நோயாளிகள் மருந்தினை எடுத்து கொள்வதை கண்காணிப்பது ஆகும். விலையில்லா உறையில் காசநோய் மருந்துகள் வைக்கப்பட்டிருக்கும். இவ்வுறையில், மருந்து வைக்கப்பட்டிருக்கும் துளையிடப்பட்ட மடிப்புகளுக்குப் பின்புறம் ஒரு கட்டணமில்லா தொலைபேசி எண் மறைத்து வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு முறையும் நோயாளி மருந்தினை எடுக்கும்போதும், மறைந்துள்ள எண்ணிற்கு மிஸ்டு கால் அல்லது குறுஞ்செய்தியை அனுப்பலாம். இதற்கு எவ்வித கட்டணமும் வசூலிப்பது இல்லை.


 

நோயாளி ஒவ்வொரு முறையும் மருந்து எடுத்துக் கொள்ள  நினைவூட்டுவதற்கு  MERM தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு டிஜிட்டல் மாத்திரைப்பெட்டியாகும். இது தினசரி மாத்திரை எடுத்துக் கொள்ளும் நினைவூட்டல்களை நோயாளிக்கு வழங்குகிறது மற்றும் மருந்துகளை சரியாக கடைபிடிப்பதை கண்காணிக்கிறது. இந்த அமைப்பு தினசரி எடுக்கவேண்டிய மருந்தின் அளவு மற்றும் ரீஃபில் ஆகிய இரண்டிற்கும் காட்சி பதிவு  மற்றும் கேட்கக்கூடிய நினைவூட்டல்களை அனுப்புகிறது.

இதன்மூலம் சுகாதார தன்னார்வலர்கள் நோயாளிகளுக்கு தேவையான ஆலோசனைகளையும், அவர்கள் மருந்து எடுத்துக்கொண்டு வருவதையும் சுகாதார நிலையங்களில் இருந்து கண்காணிக்கலாம்.


 

Content Creator

Reviewer