Content Status

Type

Linked Node

H5Content
Content

சிகிச்சை ஆதரவாளர்கள் மதிப்பூதியம் பெறுவதற்கான தகுதிகள்:

காசநோயாளிகள் சிகிச்சையை முடிக்கும் போது அவர்களது சிகிச்சை காலம் முழுவதும் ஆதரவாக இருந்த “சிகிச்சை ஆதரவாளர்கள் “ மதிப்பூதியம் பெறுவதற்கு தகுதிஉடையவர்கள் ஆவர். சிகிசையின் முடிவில் நோயாளிகள் முற்றிலும் குணமடைந்தவர்கள் என்று அறிவிக்கப்படும் போதும், சிகிச்சையை “முழுவதுமாக முடித்தவர்கள்” என்று அறிவிக்கப்படும் போதும் மட்டுமே “சிகிச்சை ஆதரவாளர்கள்” மதிப்பூதியம் பெற தகுதியுடையவர்களாகிறார்கள்.

 சிகிச்சை ஆதரவாளர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியங்கள்:   

  • முதல் நிலை மருந்துகளுக்கு கட்டுப்படும் காசநோய்க்கு மருந்து எடுதுக்கொண்ட காசநோயாளிகளுக்கு (DSTB)ஆதரவாக இருந்தவருக்கு ரூ. 1000 /- மதிப்பூதியம் வழங்கப்படும்.
  •  மருந்து எதிர்ப்புத் திறன் காசநோய்க்கு(DRTB) மருந்து எடுப்பவர்களுக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு ரூ. 5000/- மதிப்பூதியமாக வழங்கப்படும்.

இந்த மதிப்பூதியங்கள் நி-க்ஷய் மூலம் வழங்கப்படுகிறது. சிகிச்சை ஆதரவாளர்கள் கீழ்கண்ட நிபந்தனைகளை பின்பற்றி மதிப்பூதியம் பெறுவதற்கு “நி-க்ஷயில்” தங்களே முன்பதிவு செய்து கொள்ளலாம்.

  • மதிப்பூதியம் பெறுவதற்கு சிகிச்சை ஆதரவாளர்கள் தங்களை நி-க்ஷயில் பதிவு செய்திருக்க வேண்டும்.
  • தங்களது வங்கி விவரங்களை காசநோய் சுகாதாரப் பணியாளர்களிடம் வழங்கியிருக்க வேண்டும்.
  • அவர்களது ஆதரவுடன் சிகிச்சை பெற்றுவந்த காசநோயாளிகள் முழுமையாக சிகிச்சையை முடித்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • நோயாளிகளின் பாலினம் மற்றும் அலைபேசி எண்ணின் அடிப்படையில் நி-க்ஷய் நோயாளிகளின் தகவல்களை சேகரித்து வைத்திருக்கும்.
  • பன் மருந்து எதிர்ப்பு காசநோயாளிகளுக்கு (DRTB) ஆதரவாக இருப்பவர்கள் இரண்டு தவணைகளில் பணப் பலன்களைப் பெற முடியும். 
  • மதிப்பூதியத்தின் மொத்த தொகையில், முதல் தவணையான ரூ 2000/- த்தை தீவிர சிகிச்சை கால கட்டம் முடிவுறும் போது, அதாவது சிகிச்சை தொடங்கி 6 மாதம் முடிவுறும் போது பெற முடியும்.
  • இரண்டாவது தவணையான ரூ 3000 த்தை மொத்த சிகிச்சை காலமும் முடிவுற்று நோயாளி”குணமடைந்தவர்” என்று அறிவிக்கப்படும் போது அல்லது “சிகிச்சையை முழுமையாக முடித்து விட்டார் என்று அறிவிக்கப்படும் போது பெற முடியும்.

Content Creator

Reviewer